இன்றைய நற்செய்தி:

யோவான் 2:1-12

எனது நேரம் இன்னும் வரவில்லையே!

அருள்மொழி :

இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். யோவான் 2:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில்,இயேசுவும், தாயும் கானாவூர் திருமணத்திற்கு அழைக்கப் பெற்றிருந்தனர். அங்கு திராட்சை ரசம் தீர்ந்து போகவே அதை அன்னை மரியா உணதர்ந்தவளாக "ரசம் தீர்ந்து போயிற்று" என்று தன் மகனைப் பார்த்த முறையிடுகின்றார். ஆனால் இயேசுவோ என் நேரம் இன்னும் வரவில்லை என்ற ஓர் உள்ளார்ந்த கருத்தை முன் வைக்கின்றார். நேரம் என்றால் என்ன? யாருக்காக மானிடமகன் மண்ணகம் வந்தாரோ அந்த கடை மக்களாகிய பணியாளர்கள் பந்தியில் இன்னும் அமரவில்லை. எனவே தான் இறைமகன் வினாவை தொடுக்கின்றார். நண்பர்களே! பெரும்பாலும் அன்றும் இன்றும் தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்று முதல் இரண்டு மூன்று பந்தி முடிவடையும். கடைசியாக வேலை செய்பவர்கள், வறியோர் மிச்சம் மீதியுள்ளதை உண்பார்கள். அப்படிப்பட்ட கடைசி விருந்தினரை தேடியே இறைமகன் வந்தார் என்பதே இந்த கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அந்த கடைநிலை மக்கள் உண்டு மகிழ்ந்திடவே இறைமகன் என்நேரம் இன்னும் வரவில்லைல என்ற புதிரை முன் வைக்கின்றார். எனவே அன்பர்களே நாமும் நம் ஒறவுகளளு நண்பகளையும் தாண்டி ஓர் உன்னதமான இயேசுவுக்கு பிடித்தமான உறவுகளை நாடிச் செல்வோம். பகிர்ந்து பல்லுறவு காண்போம் என்பதே இந்த கானாவூர் திருமண விருந்தின் நோக்கம் என்பதை இதயத்தின் ஆழத்தில் பதிவு செய்வோம். செயல்படுவோம்.

சுயஆய்வு:
  1. என் நேரம் இன்னும் வரவில்லையே என்பதின் பொருளை உணர்கின்றேனா?
  2. ரசம் தீர்ந்து போச்சு என்பதின் பெருள் என்ன?
இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம் வருகையின் நோக்கத்தை அறிந்து உணர்ந்து செயல்பட வரம் தாரும் . ஆமென்