ஜூன் 30 -ஞாயிறு

இன்றைய நற்செய்தி

லூக்கா 9:51-62

"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு தகுதியுள்ளவர்"

அருள்மொழி :

இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" என்றார்.
லூக்கா 9:62

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம்மைப்பின்பற்ற விரும்பியவர்களைக் குறித்துக் கண்ணும் கருத்துமாக விளக்குகின்றார். ஒருவர் இறைமகனிடம் "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார். இயேசு "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலைச் சாய்க்கக்கூட இடமில்லை" என்றார். காரணம் எந்த ஊரையும் நாட்டையும் என் வீட்டையும் உரிமையாக்கிக் கொண்டு வாழவில்லை. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே மாட்டுகுடிலில் பிறந்து வளர்ந்து மானிடருக்காகத் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் ஒரு தன்னார்வத் தொண்டரைப்போல் வாழ்ந்த அவர் "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்காதே! என் கட்டனையைக் கடைபிடித்து என்னைப் பின் தொடர். நீ நிலைவாழ்வை அடைவாய். நான் எதையெல்லாம் இவ்வுலகில் செய்தோனோ அவற்றையெல்லாம் நீயும் செய்" என்கிறார்.

சுயஆய்வு :

  1. என்னை பின் தொடர் என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. இறையரசு பாதையில் கால் வைக்க எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மை பின் தொடர்ந்து நின் பணியாற்றிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org