ஜூன் 29 - சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 16:13-19

"யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்"

அருள்மொழி:

சீமோன் பேதுரு மறுமொழியாக," நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு," யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.
மத்தேயு 16:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை நோக்கி ' மானிடமகன் மக்கள் யாரெனச் சொல்கிறார்கள் என்று கேட்பார். சிலர் யோவான் என்றும், சிலர் இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்வதைப் பதிவுச் செய்கின்றனர். நீங்கள் யாரென்று கேட்டதும் புனித பேதுரு ' நீர் மெசியா வாழும் கடவுளின் மகன் என்றதும், இறைமகன் யோனாவின் மகனான சீமோனே பேறுபெற்றவன். எந்த மனிதருக்கும் வெளிபடுத்தாத என் தந்தை உன் வாயிலாக வெளிபடுத்தியுள்ளார். எனவே 'நீ பாறை'. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் இதன்மேல் வெற்றிக் கொள்ளா. விண்ணரசின் திறவுக் கோலை உன்னிடம் கொடுப்பேன். மண்ணுலகில் எதையெல்லாம் நீ அனுமதிப்பாயோ அவையெல்லாம் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என்றார். இன்று புனித பேதுரு புனித பவுல் திருத்தூதர்கள் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். புனித பவுல் இறைமகனின் உயிர்ப்பிற்குப் பின் ஆட்கொள்ளப்பட்டவர்.

சுயஆய்வு :

  1. புனித பேதுரு - புனித பவுல் திருத்தூதர்களை அறிகிறேனா?
  2. புனித பேதுருவின் அறிக்கை என்னுள் உணர்த்தும் செய்தி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது புனிதர்கள் போல் வாழும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org