ஜூன் 28 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

லூக்கா 15:3-7

"மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் "

அருள்மொழி:

அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
லூக்கா 15:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், பாவிகள் மனம் மாறிட இயேசுவின் போதனைகளை கேட்க நெருங்கி வருவதை பார்த்த அங்கிருந்த பரிசேயர் இயேசுவை நோக்கி "பாவிகயோடு விருந்துண்ணுகிறார்" என வார்த்தைக்கு காணாமால் போன ஆட்டியின் உவமை வாயிலாக சாட்டையடி கொடுக்கின்றார். நேர்மையாளர்களை விட கெட்டு திரிந்து போன ஊதாரியை போன்றுள்ளவன் இயேசுவின் போதனைகளைக் கேட்டு அன்றும் இன்றும் மனம் மாறும் மானிடரை அவர் மேன்மையோடு பார்க்கின்றார். மனிதன் என்பவன் பலவீனன். ஆனால் அவன் மனம் மாறிட அனேக தருணங்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்று அவனுக்கு மன்னிப்பு அருள்வதே ஒரு தந்தையின் விருப்பம் என்பதை ஆடுகளின் உவமை வாயிலாக இன்றும் நமக்கு நல்ஆசானாக மனம் மாறிட அழைக்கின்றார்.

சுயஆய்வு:

  1. மனம் மாறிட என் முயற்சி யாது?
  2. மனம் மாறியவர் விண்ணுலகில் பெரும் மகிழ்ச்சி எத்தகையது அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! பாவியாகிய நான் மனம் மாறி உமது இறையரசில் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org