ஜூன், 27 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 7:21-29

“மறைநூல் அறிஞர்களைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர் கற்பித்தார்."

அருள்மொழி:

ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்
மத்தேயு 7:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நல் ஆசானாக பதிவு செய்கின்றார். “என்னை 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று வெளி உதட்டில் புலம்புபவர்களெல்லாம் விண்ணகத்திற்குள் புக முடியாது. காரணம், சொல்வதைச் செய்ய மாட்டார்கள். உதட்டளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கும். எனவேதான் உண்மைக்கு உழைப்பவர்கள் இறைவாக்கைக் கேட்டு அதன்படி வாழ்பவர்கள்தான் விண்ணரசுக்குள் புக முடியும்.” இன்றும் அனேகர் பொய் போதகர்களாகவும், செல்வத்திற்கு அடிமைகளாகவும், இறைவார்த்தையின் சாராம்சத்தை உணர்ந்து செயல்படாமலும் வாழும் அனேகரை இவ்வாறு சொல்கின்றார். இவ்வுலகம் நிலையல்ல. ஒரு நாள் மரணம் வரும். அப்போது நாம் வாழ்ந்த வாழ்வின் அடிப்படையில்தான் மறுவாழ்வு அமையும் என்று கூறுகின்றார்.

சுயஆய்வு :

  1. நான் எவ்வாறு வாழ்வது என்பதை அறிகிறேனா?
  2. இறைமகனின் அதிகார கற்பித்தல் என் காதில் விழுகின்றதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உம் அதிகார வாக்கு என் வாழ்வின் நங்கூரமாகட்டும். ஆமென்.


www.anbinmadal.org