ஜூன் 26 - புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 7:15-20

"போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே அறிந்துக் கொள்வீர்கள்."

அருள்மொழி :

இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.
மத்தேயு 7:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் போலிஇறைவாக்கினர்களை இனம் காட்டுகின்றார். அவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள். இறைவாக்குரைக்கும் வேடத்தில் நம்மை நாடிவருகின்றனர். இறைவாத்தையை வியாபாரம் செய்து கொள்ளையடிக்கும் ஓநாய்கள் என்று சாடுகின்றார். இவர்களது செயல்கள் உள் ஒன்று வெளியிலொன்றாக இருக்கும். பிறர் அவர்களைக் காண வேண்டுமென்றும் இவர்களது போதனைகள் உண்மையானது என்பதற்காக மக்கள் காணும் வண்ணம் தொங்கலாடைகளை அணிந்துக் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் தன்மைக் கொண்டவர்கள். இவர்களது நோக்கம் பணம் சேர்ப்பது, புகழ் என்னும் ஏணிப்படிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆதங்கத்தில் போலியாக வாழ்வு வாழ்ந்து அடுத்தவர்களைக் கெட்டகழிக்கும் ஓநாய்கள் என்பதை மனதில் பதிவு செய்து எச்சரிக்கையாய் இருங்கள்

சுயஆய்வு :

  1. போலி இறைவாக்கினர்களை இனம் காண்கிறேனா?
  2. இவரது செயல்களினால் அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இறைவா! உமது வார்த்தை உண்மையானது வாழ்வு தருவது என்னும் எண்ணம் மேலோங்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org