ஜூன் 25 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 7:6,12-14

"வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; "

அருள்மொழி :

வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது;
வழியும் மிகக் குறுகலானது;
இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
மத்தேயு 7:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு பொன்விதியை முன் வைக்கின்றார். அதாவது பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் நீங்களும் அடுத்தவர்களுக்குச் செய்யுங்கள். அதே வேளையில் உண்மையை நோக்கி வாழ்வு தரும் பாதை மிகவும் குறுகலானது. இதன் வழியாக நநுழைவோர் குறைவு என்று இறைமகன் சாடுகின்றார். வழி என்பது நாம் உலகில் உல்லாசம் ஆனந்தச் சுகபோக வாழ்க்கை வாழ எத்தகைய தீயச்செயல்களாக இருப்பினும் அதனையடைய ஆர்வமாய் அனுபவிப்போம். அடுத்தவர் வாழ்வைப் பாதிக்கும் செயலாக இருப்பினும் சுயநலத்திற்காக இந்த விசாலமான பாதையில் பயணிப்போம். இதே வாழ்க்கை மறுவாழ்விற்குச் செல்லும்போது அது குறுகலானது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? என்ற கேள்வியே இங்கு மேலோங்கி நிற்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். என்று உள்ள நிலைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

சுயஆய்வு :

  1. வாழ்வு என்றால் என்ன? அறிகிறோனா?
  2. இவ்வுலக வாழ்வின் மறுபுறமே உண்மை வாழ்வு அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! இவ்வுலக வாழ்வின் மேன்மையே மறுமையின் அடிதளம் என்று உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org