ஜூன் 24 - திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:57-66,80

திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா"

அருள்மொழி :

அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.
லூக்கா 1:63

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் முன்னூடி திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைத் தாய் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவ வரலாற்றில் இரண்டு பேருக்கு மங்களச் செய்தி வழங்கப்பட்டுள்ளது. 1. செக்கிரியா 2. கன்னி மரியா இருவரும் வானதூதர் கபிரியேல் வாயிலாகப் பிறப்பு வாக்குப் பெற்றவர்கள். கிறிஸ்து பிறப்பை முன்னறிவித்துச் சிதறுண்ட மக்களினங்களுக்குத் திழுமுழுக்குக் கொடுத்துச் சாதி, சமயம், இனம், கடந்தவராக ஒட்டகத் தோலை ஆடையாகவும், தேனும் திணை மாவும் உண்டும் அனைவரையும் ஒண்றிணைத்து இறைவாக்குரைத்தவரே திருமுழுக்கு யோவான். "நானோ நீரினால் திருமுழுக்குக் கொடுக்கிறேன் எனக்குபின் வருவரோ நெருப்பினால் கொடுப்பார். அவரது மிதியடியைக் கூடத் தொடத்தகுதியற்றவன்" என்று எளிமை கோலம் பூண்டுச் சாதி-சமயம்-இனத்தின் பெயரால் சிதறுண்ட மக்களளை இறைமகனில் ஒன்றிணைக்கின்றார் திருமுழுக்கு யோவான்.

சுயஆய்வு:

  1. திருமுழுக்கு யோவான் அறிகிறேனா?
  2. அவரது பிறப்பு மேடுபள்ளகளைச் சமமாக்கியது அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது முன்னோடியான திருமுழுக்கு யோவானை போன்று பணிந்து பணி செய்யும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org