ஜூன் 22 - சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:24-34

"நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்."

அருள்மொழி :

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்
மத்தேயு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, நாளைய நிலையைப் பற்றிக் கவலை வேண்டாம். அன்றன்றுள்ள தொல்லையே போதும். வயல்வெளி, காட்டுமலர் செடிகளைப் பாருங்கள். வானத்துப்பறவைகளைப் பாருங்கள். அவை அறுபதுமில்லை. களஞ்சியத்தில் சேமித்து வைப்பதுமில்லை. அவற்றுக்குரிய உணவை அன்றன்றே வழங்குகின்றார் ஆன்றோ! எனவே நாளைய கவலைகள் இறைவனின் மார்பில் உறங்கட்டும். கடந்தவைக் கடந்தவையாகட்டும். அன்றன்று உள்ளத் தொல்லையே நிகழ்காலத்து சிந்தனைகளை இறைவார்த்தையின் ஒளியில் சீர் தூக்கிக் பார்த்துக் கிடைத்ததைப் பகிர்ந்து உண்டு பல்லுயிரைக் காப்போம். இந்த நாளும் நமதே! நாளைய தேவை இறைவனது மார்பில் உறங்கட்டும். எனவே எதற்கும் அஞ்ந வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் நம் உடன் பயணிக்கிறார்.

சுயஆய்வு:

  1. இன்றைய நாளின் மேன்மைகளை அறிகிறேனா?
  2. கிடைத்ததைப் பகிர்ந்து உண்கிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! அன்றன்று உள்ளளதை வறியாருக்கும் பகிர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org