ஜூன் 21 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:19-23

"விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்."

அருள்மொழி:

ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
மத்தேயு 6:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உண்மைச் செல்வம் எது என்று சுட்டிக்காட்டுகின்றார். காரணம் மண்ணுலகில் அனோகர் நாம் நமது சொத்துச் சுகம் பணம் என்ற பலநிலைகளில் பணம் சம்பாதிக்கம் நிலையில் ஒருவரை ஒருவர் அடித்தும் கொன்றும் சொத்துச் சேர்க்கப் போராடும் நிலை நாம் அறிந்ததே! ஆனால் இங்குப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சேர்க்கும் செல்வமானது ஒருவர் இறந்தால் அஃது உடன் பயணிப்பதில்லை. மாறாக அதனைக் கொள்ளையடிக்கப் பலபேர் காத்திருப்பர். புழுபுச்சிகளும் தின்றுவிடும். ஆனால் நாம் வாழும் இந்த உலகில் போத மீதியை ஏழை எளியோருக்கக் கொடுத்து அவர்ளது துயரைத் துடைக்கும் போது அச் செல்வம் உண்மை செல்வமாக விண்ணுலகில் உணர்ந்துநிற்கும். அங்கும் கொள்ளையர்கள் கிடையாது. நாமும் மறுவுலக வாழ்வில் விண்ணவரோடு மகிழ்ந்து அக்களிப்போம் என்பதே உண்மை.

சுயஆய்வு :

  1. உண்மைச் செல்வம் என்னவென்று அறிகிறேனா?
  2. நாமும் உடன் பயனிப்பவை எவை என்றுஅறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, இவ்வுலகில் வாழும் போதே உண்மை செல்வத்தை அடைய போதுமான அறச்செயல்களை செய்திடும் வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org