ஜூன் 20 - வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 6:7-15

"மனிதர்களின் குற்றங்களை மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்."

அருள்மொழி :

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
மத்தேயு 6:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எப்படிச் செபிக்க வேண்டும் என்று நடக்குக் கற்றுதருகின்றார். பிற சபையினரைப் போன்று எல்லாரும் பார்க்க வேண்டும் என்று பிதற்ற வேண்டாம். மறைவாயுள்ள உன் இறைவன் நீ கேட்குமுன்னரே உங்கள் தேவைகளைப் புர்த்திச் செய்வேன் என்று பெரும் வள்ளலாக நமக்கு வலிறுத்துகின்றார். மேலும் அவர் கற்றுத் தந்த மகாமந்திரமாகிய கர்த்தர் கற்பித்த செபத்தில் முதல் பகுதியில் இறைவனுக்கும் நடக்குமுள்ள உறவை புடமிட்டும் காட்டுகின்றார். இரண்டாவது தகுதியில் நாம் வாழும் சமுதாயத்தில் அடுத்திருப்பவர்களோடு அவர்களின் உறவுத் துன்பதுயரங்களில் நமது பங்கேற்பு - பிறர் குற்றங்களை எவ்வாறு மன்னிப்பதென்றும் நமக்கு நலாசானாகப் போதிக்கின்றார். நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவின் வெளிப்பாடே கர்த்தர் கற்பித்த செபம் என்பதை நம் வாழவில் கடைப்பிடிப்போம்.

சுயஆய்வு :

  1. மனிதரின் குற்றங்களை மன்னக்கிறேனா?
  2. இறை மனித உறவில் எனது பங்கேற்பு யாது?

இறை வேண்டல்:

அன்பு இறைவா! பிறர் குற்றங்களை மன்னித்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org