ஜூன், 19 - புதன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 6:1-6, 16-18

“நீங்கள் தர்மம் செய்யும் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும்."

அருள்மொழி:

நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
மத்தேயு 6:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, நாம் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என்றும், அறச்செயல்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நல் ஆசானாகப் பதிவு செய்கின்றார். நாம் செய்யும் தர்மம் வலக்கைச் செய்வது இடக்கை அறியா வண்ணம் இருக்கட்டும் என்கிறார். எல்லோரும் பார்க்க வேண்டும் என்று பலர் செய்வதை அன்றும் இன்றும் நாம் காண்கின்றோம். இத்தகைய தர்மம், தர்மம் ஆகாது. வலக்கை செய்வது இடக்கை அறியா வண்ணம் இரகசியமாகச் செய்ய வேண்டும் என்று இறைமகன் நமக்குக் கூறுகின்றார். வாங்கிக் கொள்கிறவர்களும் மகிழ்வார்கள். அதே வேளையில் மறைவாயுள்ள விண்ணகத் தந்தையும் மிகுந்த கைம்மாறு கொடுப்பார்.

சுயஆய்வு :

  1. தர்மம் எவ்வாறு செய்கின்றேன்?
  2. தர்மம் செய்யும் மனநிலை என்னிடம் உள்ளதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தையின்படியே தர்மம் செய்யும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org