ஜூன், 18 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 5:43-48

உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்

அருள்மொழி :

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்
மத்தேயு 5-48

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உங்கள் பகைவரிடம் அன்பாயிருங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். நம் வானகத் தந்தை நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழைப் பெய்யச் செய்கிறார். எகவே தான் வானகத் தந்தை நிறைவுள்ளவராக உள்ளார். கடவுள் மானிடரைத் தீயோர் என்று ஒதுக்கிவைத்தால் மனுகுலம் என்னவாகும். சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இந்த வையகத்தில் வாழ்பவர்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனரே! எனவே தான் இறைவன் சமத்துவம் காண்கின்றார். எனவே இயன்ற உதவியைச் செய்வோம். அதற்குறியக் கைம்மாறு நமக்கு அளிப்பார் என்ற சிந்தனைகளை மனதில் பதிவு செய்வோம்.

சுயஆய்வு :

  1. தந்தையின் நிறைவுள்ளத்தை அறிகிறேனா?
  2. என் மனம் எத்தகையது சிந்திக்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல நிறைபெற வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org