ஜூன் 17 - திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:38-42

"உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்."

அருள்மொழி :

உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
மத்தேயு 5:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு யாரையும் பழிக்குப் பழி வாங்கதீர்கள். உங்களிடம் கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுங்கள். கொடுப்பவர் மீண்டும் ஒன்றுக்கு இரண்டாகப் பொறுக்கொள்வார்கள். ஏனெனில் கொடுக்கிறவர்களுக்கு இறைவன் அள்ளிக் கொடுப்பார் என்று நல் ஆசானாக வலியுறுத்துகின்றார். எனவே நமக்கு அடுத்திருப்பவர்கள் துன்புற்று இருந்தால் அவர்களுக்கு நம்மாலான உதவியை வழங்கிடவும் ஏழை எளியவர்கள் வாழ்வே நமது நிலைவாழ்விற்கு அடிதளமாகும் என்ற உயர்நடத அரக்கப்பெருக்கத்தைக் கொண்டுவாழ்வோம். இதனைச் சுட்டிகாட்டவே இறைமகனின் மண்ணக வருகை என்பதனை மனதில் பதிவு செய்து இறை -மனித - உறவில் வாழ்ந்திட வளர்ந்திட நற்செய்தியின் தூதுவராய் வலம் வருவோம்.

சுயஆய்வு :

  1. கேட்பவர்களுக்கு கொடுக்கிறேனா?
  2. அடுத்தவர் மீது தேவையற்றச் சினம் கொள்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! முகம் கோணாது ஏழை எளியவர்களுக்கு உதவிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org