ஜூன் 16 - ஞாயிறு
தூய்மைமிகு மூவொரு கடவுள் பெருவிழா

இன்றைய நற்செய்தி

யோவான் 16:12-15

-"அவர் என்னை மாட்சிமைப்படுத்துவார்"

அருள்மொழி :

"அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்..
-யோவான் 16:14

வார்த்தை வாழ்வாக:

மூவொரு இறைவன் - நம் புத்திக்கு அப்பாற்பட்ட கடவுள்- அவர் படைத்த படைப்பின் மூலமாகவும், படைப்பை அழிவினின்று மீட்டெடுத்தவராகவும், படைப்பை பராமரிப்பவருமாக மூவொருக்கடவுள் திகழ்கின்றார். தந்தை படைப்பின் கொடுமுடியாகவும், மகன் மீட்பராகவும், தூய ஆவி நம்மைப் பராமரிப்பவராகவும் உள்ளனர். மூவொருகடவுள் அனைத்திற்கும் முதலாகவும் முடிவுமாகவும் உள்ளார். இயேசு என் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பது போல நம்மையும் அழைக்கின்றார். அகத்துள் உறைந்திருக்கும் இறைவனை இனம் கண்டு அவரில் இணைவோம். பிறகு அயலான் இதயத்திலிருக்கும் இறைவனை இனம் காண்போம்.

சுயஆய்வு :

  1. தந்தையின் படைப்பாற்றலை உணர்கின்றேனா?
  2. தூய ஆவியார் மகனின்று பெற்ற வழங்குகிறார். அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உம் வழியாக தந்தையையும் - ஆவியானவரையும் கண்டுணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org