ஜூன் 15 - சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:33-37

"இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது."

அருள்மொழி:

ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
மத்தேயு 5:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பொய்யாணையிட வேண்டாம் என்று வெகுவாகக் கண்டிக்கின்றார். ஏனென்றால் விண்ணுலகு ஆண்டவரது “அரியணை“ - மண்ணுலகு மீதும் ஆணையிட வேண்டாம். ஏனெனில் அது கடவுளின் கால்மணை என்பதை உணர்ந்தவர்களாய் வார்த்தைகளை வெளியிடும்போது எதைக் குறித்த பேசுகின்றோம்? எதற்காகப் பேசுகின்றோம் என்பதை உணர்ந்து உண்மையை நோக்கி வழிநடத்துபவர் நம் தூய ஆவியாரில் நாம் இயங்கிடுவோம். உண்மை எதுவோ அதற்கு ஆம் என்போம். தீமை எதுவோ அதனை இல்லை என்று பிரித்து உய்த்துணர்ந்து இறை - மனித - உறவில் நாளும் வளர்ந்திடுவோம். அளவோடு பேசி வளமோடு வாழத் தூய ஆவியார் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

சுயஆய்வு :

  1. எனது பேச்சு எத்தகையது?
  2. உண்மையை நோக்கி பயணிக்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உண்மையை நோக்கி வழி நடத்தும் தூய ஆவியாரை என்னில் உறைந்து உறவாடும் வரம் தாரும். ஆமென்