ஜூன் 14 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:27-32

"ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் விபசாரம் செய்தாயிற்று."

அருள்மொழி :

ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
மத்தேயு 5:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விபசாரம் செய்யாதே என்ற வன்மையாகக் கண்டிக்கின்றார். காரணம் அன்றும் இன்றும் ஆண்கள் பெண்களை ஒரு போகப் பொருளாகவே கருதிப் பெண்மையை இழிவுப் படுத்தும் நிலை மேலேங்கி உள்ளது. இந்நிலை முற்றிலும் மாறவேண்டுமானால் ஒவ்வொருவரும் இந்நற்செய்தயை உள்வாங்கி இதன் பொருளை உணர்ந்து வாழக் கற்க வேண்டும். பெண் என்றால் அவள் சகோதரி என்ற மனநிலை ஆடவரிடம் உருவாக வேண்டும். அனைவரும் இறைவனின் பார்வையில் படைப்பில் உடன்பிறப்புக்களே என்ற சிந்தனை ஒவ்வொருவரின் மனதில் மேலோங்க வேண்டும். இதுவே இறைமகனின் வேட்கை என்பதை உணர்ந்துப் பெண்களை உடன்பிறப்புகளாக நினைத்து இறை -மனித -உறவில் வலம் வருவோம்.

சுயஆய்வு:

  1. அமைதியை நான் அறிகிறேனா?
  2. இவ்வுலகம் தரமுடியாத அமைதியை நான் அடைய என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உலகம் தரமுடியாத அமைதியில் நான் வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org