ஜுன் 12 - புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:17-19

"திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன்"

அருள்மொழி:

"திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு 5:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு "திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன்" என்கின்றார். காரணம் அன்றைய சூழலின் திருச்சட்டத்தின் பெயரால் பல 600 சட்டங்களுக்கு மேலாக உருவாக்கி மக்களைத் துன்புறுத்தும் நிலை மேலோங்கி இருந்தது. இயேசுவின் வருகை இந்தச் சூழலில் தான். இதனை உணர்ந்துப் பார்க்கமுடியாத யூதவர்க்கம் மெசியா என்று ஏற்காமல் திருச்சட்டத்தின் கொள்கைகளை அழிக்கின்றான் என்று இயேசுவைச் சாடினார். அவ்வேளையில் தான் இயேசு பத்துக்கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும், மனிதருக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு என்பதைச் சுட்டிகாட்டி இரண்டு கட்டளைகளையாக 1 ஒரே கடவுள் 2. தன்னைத் தான் அன்பு செய்வது போல் அயலானை அன்பு செய்வது என்று போதனை மூலம் வெளிபடுத்தி இவர்களின் ஆதிக்கச் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சுயஆய்வு:

  1. திருச்சட்டம் என்றால் என்ன?
  2. இரண்டு கட்டளைகள் தான் உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உண்மைப் போதனைகளின் படி வாழ்ந்திட வரம் தாரும். ஆமென்


www.anbinmadal.org