ஜுன் 11 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:7-13

"வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்!"

அருள்மொழி :

வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.
மத்தேயு 10:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை ஊர்கள் தோறும் அனுப்புகின்றார். “நீங்கள் எங்கு சென்றாலும் அந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்து கூறுங்கள். அந்த வாழ்த்திற்குரிய தகுதி அந்த வீட்டில் இருந்தால் அந்த வீட்டிற்கு சாந்தமும், அமைதியும் குடிக்கொள்ளும். அப்படி தகுதியற்றவர் அங்கு இருந்தால் அந்த அமைதி மீண்டும் உங்களிடமே திரும்பிவரும்” என்ற நல் ஆன்மீகவாதியாக வலியுறுத்துகின்றார். காரணம் நம்மில் பலர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும். உண்மையை அங்கு காணமுடியாது வெளிவேடக்காரர்களாக இருப்பார்கள். அத்தகையோரை பார்த்து தான் திருத்தூதர்களுக்கு எப்படி பணி செய்யவேண்டும் என்றும், வரும் சவால்களை எப்படி எதிர்கொள்வதென்றும் வலியுறுத்துகின்றார்.

சுயஆய்வு :

  1. அமைதியை நான் பெற தகுதியுள்ளேனா?
  2. அமைதி என்றால் என்ன?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது அமைதியை நான் பெந்நிடும் தகுதியை என்னுள் புதிப்பித்திடும் வரம் வேண்டி நிற்கின்றேன். ஆமென்.


www.anbinmadal.org