ஜுன் 6 - வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 17:20-26

"நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை. ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன்.”

அருள்மொழி:

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.
யோவான் 17:25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “என் வார்த்தையின் மூலம் என்னிடம் நம்பிக்கைக் கொண்டவர்களுக்காகவும் வேண்டுகிறேன். நீரே என் வழியாக உம் மக்களைப் பராமரிக்கின்றீர். தந்தையே, நீர் என்னுள்ளும், நான் உம்முள்ளும் ஒன்றாய் இணைந்திருப்பது போல, அவர்களும் திருமுழுக்கின் வாயிலாக என் மறையுடலாகியுள்ளார்கள் என்பதை உணர்ந்தவர்களாய் அனைவரும் உணர்ந்து வாழ்ந்திட வரம் வேண்டுகின்றேன். தந்தையே, உலகுத் தோன்றும் முன்னரே என்னை மாட்சிப்படுத்தினீர். அவ்வாறே நானும் அவர்களோடு அன்பு கொண்டு மாட்சிப்படுத்தி, அவர்களோடு இணைந்திருக்கவும் விரும்புகிறேன்” என்று இறைமகன் நமக்காகத் தந்தையிடம் இறைவேண்டல் செய்கிறார். நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறிந்துக் கொள்ளவில்லை. ஆனால் நான் அறிந்து உணர்ந்து உம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்து இறைமையில் இணைந்திடுவோம்.

சுயஆய்வு:

  1. இறைமகனின் வாயிலாகத் தந்தையை அறிகிறேனா?
  2. அவரது மாட்சி எனக்கு உணர்த்தும் செய்தி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது மாட்சியில் இறை அன்பில் இணைந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org