ஜுன் 5 - புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 17:11-19

“தீயோனிடமிருந்து அவர்களைக் காத்திட வேண்டுமென்றே வேண்டுகிறேன்.”

அருள்மொழி :

அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.
யோவான் 17:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு, இவ்வுலகம் பலவித மாயைகளினால் நிறைந்தது. தீயோனின் தாக்குதலில் மக்கள் சிக்குண்டுப் போவார்கள் என்ற வேட்கையின் பொருட்டுத் தந்தையிடம் இறைவேண்டல் செய்கின்றார். காரணம், இறைமகன் இவ்வுலகைச் சார்ந்தவரல்ல. எனவே அவரை எத்தீங்கும் நெருங்கவில்லை. ஆனால் மனிதனோ சற்றுப் பலவீனமானவன். எனவே அவனை உண்மையினால் அர்ப்பணமாக்கியருளும். உம் வார்த்தையே உண்மை. வார்த்தையினால்தான் இவ்வுலகம் தோன்றியது. அனைத்தும் தோன்றியது. உமது கட்டளையின்படியே அவர்களை இவ்வுலகிற்கு அனுப்புகின்றேன். அவர்களும் உண்மையினால் உமக்குரியவர் ஆகும்படி மானிடருக்காக இறைமகன் தன்னையே அர்ப்பணமாக்கினார். அவ்வாறே நாமும் முழுமையாக அர்ப்பணமாவோம்.

சுயஆய்வு :

  1. தீயோன் யார்? அறிகிறேனா?
  2. என்னை முழுமையாக இறைமகனுக்கு அர்ப்பணமாக்குகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு உயிர்த்த இயேசுவே! உமது இறைவேண்டல், என் இதயமதில் பதிந்திடும் வரம் தாரும். ஆமென்,.


www.anbinmadal.org