ஜுன் 4 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

யோவான் 17:1-11

"நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை."

அருள்மொழி :

நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.
யோவான் 17:7

இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் தந்தையிடம் இறைவேண்டல் செய்கின்றார். தந்தையே நீர் எனக்கு என்ன பணிக் கொடுத்தீரோ அவற்றை உம் மக்களுக்காகச் செய்து முடித்து விட்டேன். உம்மை மாட்சிப்படுத்தியுள்ளேன். தந்தையே உலகம் தோன்று முன்பே என்னை நீர் மாட்சிப் படுத்தியுள்ளீர்கள். இப்போது உமது திருமுன் அதே மாட்சிமை எனக்குத் தாரும் என்று அவரும் வேண்டுகின்றார். மேலும் தாம் தந்தையிடமிருந்து வந்தவர் என்பதை மனிதர் அறிந்துப் புரிந்து வாழும்படி அனைத்தையும் வெளியரங்கமாக வெளிப்படுத்துகிறார். எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பதை அறிந்துக் கொண்டார்கள் என்பதை இறைமகன் இறைவேண்டல் வழியாக வெளிப்படுத்துகின்றார்.

சுயஆய்வு:

  1. தந்தை மகன் உறவை நான் அறிகிறேனா?
  2. நான் என் வாழ்வில் இவ்வுறவை வெளிபடுத்துனேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது உன்னத உறவின் மேன்மை என்னில் இரண்டறக் கலந்து இடுத்தவருக்குப் பகிர்ந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org