ஜுன் 3 - திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 16:29-33

"உலகத்தில் துன்பம் உண்டு எனினும் துணிவோடு இருங்கள்!"

அருள்மொழி :

என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார்.
யோவான் 16:33

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவைப் பார்த்து அவர் சீடர்கள் இப்போது உருவகம் இன்றிப் பேசுகிறீர். இப்போது தான் நாங்கள் நம்புகிறோம் என்றார்கள். ஏன்? இப்போதே காலம் வந்துவீட்டது. அனைவரும் சிதறிடிக்கப்படுவீர்கள். என்னைத் தனியே விடுவீர்கள். ஆனால் நான் தனியாக இருப்பதில்லை. என் தந்தை என்யோடு இருக்கிறார். துன்பம் உலகில் உண்டு எனினும் துணிவோடு இருங்கள். நம்பிக்கைத் தான் உங்கள் உடன் சொத்து. இதனைக் கேடயமாகக் கொள்ளுங்கள். உங்கள் மீது துணையாளர் வருவார்! உங்களுக்க அனைத்தையும் கற்றுத் தருவார் என்று தம் சீடர்களுக்கும் நமக்கும் நல் ஆசானாப் போதிக்கின்றார். சோதணைகளைக் கண்டு பயந்து விடாமல் இறைநம்பிக்கையோடு வாழுங்கள் என்கிறார்.

சுயஆய்வு :

  1. துன்பத்தைக் கண்டு துவண்டு விடுகிறனா?
  2. ஆவியாரின் ஆற்றலை உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் பாதையில் பயணிக்கும்போது துணிவைத் தந்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org