ஜுன் 2 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் லூக்கா 24:46-53

"ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா"

அருள்மொழி:

அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
லூக்கா 24:51

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உயிர்த்த எழுந்து நாற்பது நாட்கள் வரை தம் சீடர்களுக்குத் தோன்றி "அஞ்சாதீர்கள் நானே தான். என் கைகளையும், என் விலாவையும் பாருங்கள். சொன்னபடியே மூன்றாம் நாள் உயிர்த்த விட்டேன். நீங்கள் கண்டவற்றை, கேட்டவற்றை உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். உங்களுக்குத் துணையாளரை அனுப்புவேன்" என்று உற்சாகமூட்டி வந்த இயேசு தம் சீடர்களோடு பெத்தானியா சென்று தம் கைகளை உயர்த்தி ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். சீடர்கள் அவரது விண்ணேற்றம் மனம் குளிரகண்டு வணங்கி விட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.

சுயஆய்வு:

  1. ஆண்டவரின் விண்ணேற்றம் உணர்த்தும் செய்தி யாது?
  2. உயிர்த்தவரின் மாண்பினைப் பறைசாற்ற என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு விண்ணேற்றம் அடைந்த இயேசுவே! இவ்வுலக வாழ்வில் உமது மாட்சியை எடுத்து கூறும் ஆற்றலை தாரும். ஆமென்


www.anbinmadal.org