ஜுன் 1 - சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 16:23-28

"நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்."

அருள்மொழி :

"நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன். "
யோவான் 16:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தான் உலகின் மீது வெற்றிக்கொண்டதைப் பற்றித் தெளிவாகத் தம் சீடர்களுக்கு ஏன் நமக்கும் வலியுறுத்துகின்றார். காரணம் உலகம் அவரை முழுமையாக வெறுத்தது. சுயநலம், பெண்ணசை, பொருளாசை, மிகுதியால் வறியோரைத் தள்ளி வீழ்த்தியது இதனைச் சுட்டிக் காட்டவே இறைமகன் மண்ணக வருகை. தந்தையின் நீதி, நேர்மை, உண்மை, அன்பு, பகிர்வு, சமத்துவம், சகோதரத்துவம் இவைகளை ஆடையாக அணிந்திடத் தந்தையின் விருப்பத்தை அதிகாரமாக எடுத்துரைத்தார். இப்போதனைகளை ஏற்க மறுத்ததால் அவரைக் கொன்றார்கள். எவருக்காக மண்ணகம் வந்தாரோ, அதே தந்தையின் திருவுளத்தை நிறைவுச் செய்த மாட்சிமையுடன் விண்ணகம் ஏறிச் செல்கிறார். அங்கே தந்தையின் வலப்பபக்கம் அமர்ந்து என்றென்றும் ஆட்சி செய்கிறார்.

சுயஆய்வு :

  1. தந்தையின் திருவுளம் என்னவென்று அறிகிறேனா?
  2. தந்தையின் மீட்புப் பணி எவ்வாறு நிறைவேறியது- அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! தந்தையின் திருவுளம் உம்மில் நிறைவுற்றதுப் போல என்னிலும் நிறைவேறும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org