தொட்டில் முதல் கல்வாரி வரை

பேராசிரியர் அ. குழந்தைராஜ் காரைக்குடி.
cradle2cross

தவக்காலம் வந்தவுடன் இயேசுவின் சிலுவைப்பாதையைத் தியானிக்கிறோம். அவருடைய இரத்தம், முள்முடி, சாட்டையால் அடிப்பது, அவமானப்பட்டு காரி உமிழ்தல், கன்னத்தில் அறைதல், மும்முறை கீழே விழுதல் போன்றவைகளை பிரசங்கம் செய்பவர்கள் நம் மனக்கண்முன் கொண்டு வருவர். நாமும் அழுது புலம்பி அங்கலாய்த்து வீடு திரும்புவோம். இயேசுவின் சிலுவைப்பாதை என்பது பிலாத்து நடத்திய விசாரணையில் துவங்கி மரணம், அடக்கம் வரை என்பதல்ல . இயேசுவின் வாழ்க்கை முழுவதும் அவர் பயணித்ததே மிகப்பெரிய சிலுவைப்பாதையாகும். அவரின் சிலுவைப்பாதை ஒன்றரை நாட்களில் முடிந்ததல்ல. மாறாக மூப்பத்தி மூன்றரை ஆண்டுகளாக நிகழ்ந்தவை.

1.கழுதையின் மேல் முதல்பயணம்..

Flight_Egypt பச்சைப்பாலகன் இயேசு ஒன்றரை வயதில் எகிப்துக்கு கழுதை மீதமர்ந்து அன்னை மரியாவுடன் பயணித்தது. அவரது சிலுவைப்பாதையில் முதல் மைல்கல். தனக்குப் போட்டியாக ஓர் அரசன் பிறந்திருக்கிறான் என்பதை அறிந்த ஏரோது பெத்லேகேமில் உள்ள இரண்டு வயதிற்க்குபட்ட ஆண்குழந்தைகளைக் கொன்றான். மாசில்லாக் குழந்தைகளின் தியாகம், இயேசுவை தியாக தீபமாக பின்னர் மாற்றியது. பயணம் முழுவதும் பாலைநில அனல்காற்று, இரவில் கடுங்குளிர், தண்ணீர், உணவு தட்டுப்பாடு, விஷஜந்துக்கள், மனதிலே மரியாவுக்கு அச்சம். யோசேப்புக்கு மாபெரும் பொறுப்பு. இவைகளை எல்லாம் கடந்து சென்றது இயேசுவின் சிலுவைப்பாதையின் முதல் நிலை.

2 காணாமல் போன சிறுவன் இயேசு பற்றிய மரியாவின் ஏக்கநிலை.

at temple பாஸ்கா விழாவிற்குச் சென்ற இயேசு, விழாமுடிந்ததும், தம் பெற்றோர்களோடு திரும்பாமல், தொழுகைக்கூடத்தில் மறைநூல் அறிஞர்களோடு விவதித்துக் கொண்டிருந்தார். இயேசுவைக் காணாத மரியாவும் யோசேப்பும் மீண்டும் எருசலேம் தேவாலயத்திற்குத் திரும்பிவந்து இயேசுவைக் கண்டனர். நான் என் தந்தையின் இல்லத்தில் இருக்க வேண்டாமா? என்று வானகத்தந்தையை அவர்களுக்கு அடையாளம் காட்டியவர் இயேசு. அன்னை மரியாவால் கருவிலே உருவாக்கப்பட்டவர். பழைய ஏற்பாடு நூல்கள் அனைத்தையும் கற்றவர். ஞானிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய இயேசுவின் இரண்டாம் சிலுவைப்பாதை நிலை.

3 துணிச்சலுடம் தன்னையே தாழ்த்திக் கொண்ட நிலை

jhon

மக்களெல்லாம் திருமுழுக்கு யோவானை மெசியாவாக நம்பித் திருமுழுக்கு பெற்று வந்த காலத்தில், இயேசு மக்களோடு மக்களாக நின்று தமது இறைத் தன்மையைத் துறந்து, எளிய மனம் கொண்டவராய் தாழ்ச்சியோடு யோவானின் கைகளினின்று திருமுழுக்குப் பெற்றது அவரது துணிச்சலான தாழ்ச்சிநிலை. தமது உறவினர் ஆறுமாதம் வயதிலே மூத்தவர் என்பதையெல்லாம் மறந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி, நம்மை வழிநடத்திய இயேசுவின் இந்த நிலை அவரது மூன்றாம் நிலை.


4 அலகையை ‘இறைவார்த்தையால்’ எதிர்த்த நிலை


1. திருமுழுக்கு பெற்றபின் ஆவியானவர் இயேசுவை சோதிக்க பாலை நிலத்துக்கு அழைத்துச் சென்றார். ‘பசிவந்திட பத்தும் பறந்து போகும்’ என்ற பழமொழியினைப் பயன்படுத்தி அலகை இயேசுவின் 40 நாட்கள் நோன்பினைச் சோதிக்கும் எண்ணத்துடன் ‘கற்களை அப்பமாக மாற்றிச் சாப்பிடும்’ என ஊனுடல் பசியினை போக்கப் பணித்தது. இயேசு ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்பவன் அல்ல’ கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லாலும் வாழ்கிறான்’ என்று பதிலடி கொடுக்கிறார். 2. உலகப்பொருட்களை காட்டி பதவி ஆசையினைக் காட்டியபோது ‘போ அப்பாலே சாத்தன்’ எனக் கடிந்துக்கொண்டார். 3. மலைமுகட்டிலிருந்து குதிக்கச் சொல்லி கடவுளை சோதிக்கும் வண்ணம், திட்டமிட்டபோது ‘கடவுளை வீணாகச் சோதிக்காதே’ என தக்க நெத்தியடி கொடுத்த எம்பெருமான் இயேசுவின் நான்காம் நிலை.

5 பணிகளின் துவக்க முழக்க நிலை

முப்பது வயது முடிந்தவர்களே தொழுகைக் கூடத்தில் பேசுவதற்கும், உரையாற்றவும் உரிமை உடையவர்கள். முப்பது வயது வரை மறைவான முறையில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். அவரின் இறைஉறவு 30 ஆண்டுகள் பகிரங்க வாழ்க்கைக்கு ஆபிரகாம் வர 12 ஆண்டுகளும், மோசே 40 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டனர். இயேசு தொழுகைக்கூடம் வந்தார். எசாயாவின் ஏட்டுச்சுருள் கொடுக்கப்பட்டது. அவரின் பணிகள் அங்கே காணப்பட்டன.

  • 1. எளியோர்க்கு நற்செய்தி
  • 2. ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு
  • 3. குருடருக்குப் பார்வை
  • 4. சிறைப்பட்டோர்க்கு விடுதலை
  • 5. ஆண்டவாpன் அருள் தரும் ஆண்டின் முழக்கம்
. இப்பணிகளைச் செய்யக் களமிறங்கினார். களங்கமில்லா ஆண்டவர் இயேசுவின் ஆறாம் நிலை.

6 தனக்குத் தேவையான முதல் புதுமை செய்த நிலை


ஆண்டவர் இயேசு எத்தனையோ புதுமைகளைச் செய்திருந்தாலும், தனக்கு என்று ஓரு புதுமை செய்தார். சமயச் சடங்குகள், சம்பிரதாயங்களை எதிரித்து வென்றவரை, அரசனுக்கு எதிராக மாட்டிவிடத் துடிக்கும் அன்றைய பரிசேயர்கள் இயேசுவை அணுகி ‘சீசருக்கு வரி செலுத்துவது முறையா?’ என வினவினார்கள். விடையை எப்படிச் சொன்னாலும் சிக்க வைத்து விடலாம் என்ற நயவஞ்சகர்களின் சூழ்ச்சியை அறிந்த இயேசு கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்கும், செசாருக்கு உரியதைச் செசாருக்கும் கொடுங்கள் என சாதுரியமாக பதில் சொன்னார் இயேசு..

7 தனி ஒருவராய் சமுதாயத்தை எதிர்கொண்ட நிலை

வைக்கோல்போரில் நாய் இருப்பதைப்போல, பரிசேயர்கள், யூதத்தலைவர்கள் தாங்களும் விண்ணகம் செல்லாமலும், பிறரையும் விண்ணகம் அழைத்துச் செல்லாமலும் இருந்தார்கள். ஐயோ பரிசேயரே, சதுசேயரே மறைநூல் அறிஞரே உங்களுக்க கேடு. புதினா, சீரகம் ஆகியவற்றிலலு; பத்திலொரு பாகம் கேட்பவர்களே, தாய் தந்தையைப் போற்ற வேண்டிய நீங்கள் ‘கொர்பான்’ கொடுத்து விட்டு, பெற்றோர்களை ஒரங்கட்டிவைத்து அவமானப்படுத்தியவர்களின் சுயநலத்தை தனி ஒருவராக அவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து புதிய வழித்தடத்தை அமைத்த இயேசு தான் ஏற்படுத்திய சிலுவைப்பாதையில் நடந்து செல்கிறார்

.

8 தொழுகைக்கூடங்களை கள்வர்கள் குகைகளாக்கிய கயவர்களைக் கடிந்து கொள்ளும் நிலை

பாஸ்கா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், வெளிநாடுகளிலிருந்து, தங்கள் நாட்டுப்பணங்களை உண்டியலில் செலுத்த மறுத்த கோவில் பெருச்சாளிகள் நாணய மாற்று வேலையைச் செய்து கொள்ளை அடித்தார்கள். பக்தர்கள் பலியிடக் கொண்டு வந்த ஆடுமாடு விற்பனையாளர்களை விரட்டியடித்தார். ஏழைபலியிடக் கொண்டு வந்த புறாக்களை எடுத்துச் செல்லப்பணித்தார். மொத்தத்தில் கோவில்கள் வியாபாரக் கூடங்களாக மாறியிருந்தன. தொழுகைக் கூடங்களை ‘என் தந்தையின் செபவீடாக’ மாற்றியவர் இயேசு.

9 மனிதனின் மிகப் பெரிய வீரமான செயல் மன்னிப்பு.

விபச்சாரத்தில் கையும் மெய்யுமாக பிடிபட்டவர் எனக்கூறி ஒரு பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய வந்தவர்கள், மோயீசன் சட்டப்படி இவள் இப்படி கொல்லப்பட வேண்டும் என குரல் எழுப்பிய போது சற்றும் சலனமில்லாமல் தரையில் எழுதிக்கொண்டிருந்த இயேசு தலையை நிமிர்த்தி எந்த பாவமும் செய்யதாவர் முதல் கல்லை எறியட்டும் என்றவுடன் வந்தவர்கள் அனைவரும் விலகிப் போனர்கள் தன்னையும் தன் சொல்லாற்றலால் காத்து, பிறரையும் மன்னிக்கக் கூடிய மனம் பெற்றுத்தந்த பாறை போன்ற அசைக்கமுடியாத ஐந்தாம் நிலை.

10 ஏழைகளை நேசித்து பணக்காரர்களின் எதிர்ப்பை சமாளித்த நிலை.

window's offeringஇயேசுவின் உவமைகளில் வரும் கதாபாத்திங்களில் பெயரிடப்பட்ட பாத்திரம் ஏழை இலாசர். பணக்காரனின் பெயரை இயேசு கூறவில்லை. பணக்காரன் செந்நிற ஆடையணிந்து தினத்தோறும் விருந்துண்டான். ஏழை இலாசர் புண்களில் இரத்தம் வடிய பசியால் வாடினான். மோட்சத்தில் நடந்த உரையாடல்கள் நாமறிந்தவை. ஏழை கைம்பெண் இரண்டு செப்புக்காசு போட்டாள். அதை அவர் அடையாளம் காட்டுகிறார். நமீன் பட்டணத்து விதவையின் மகன் மீது பரிவு கொண்டு உயிர்ப்பித்தார். மார்த்தா, மரியாவின் சகோதரர் இலாசர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இலாசரை ஒரு விருந்துக்கும் அழைத்துச் செல்கிறார். ஏழைகளை நேசிக்கும் இயேசுவின் பத்தாம் நிலை.

11 தான் பிறப்பதற்கு முன்பே பிறந்த ‘பிறவிக்குருடருக்கு’ பார்வை அளிக்கிறார் இயேசு.


பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகளாக பிறிவிக் குருடன் பிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தான். பரிசேயர்கள் அவனைக் குணப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் ‘ஆபிரகாமின் மகன்’ இந்தப் பிறவிக் குருடனுக்கு பார்வை கொடுத்து ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ எனக் கட்டளையிட்டு நம் திருச்சபை திருஆட்சியாளர்களின் சோம்பல் நிலையைத் தவிர்த்து ‘எழுந்து செயல்படு’ என்றவாறு சோம்பலுக்கு ஒய்வு கொடுத்த நிலை இயேசுவின் பதினோறாம் நிலை.

12 ஓய்வுநாளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர்.

ஏழாம் நாள் கடவுள் ஓய்ந்திருந்தார். அது சனிக்கிழமை. ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே என்று கூறி ஓய்வுநாளுக்கு ஓய்வு கொடுத்தவர் இயேசு. ஓய்வுநாளில் புதையுண்டு, வெற்றி வீராரக ஞாயிறு அன்று உயர்த்தப்பட்டார். வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறு தான் கிறிஸ்தவர்களுக்கு புது உடன்படிக்கையின் துவக்க நிலை. மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை. அன்றையதினம் கானவுரில் திருமணம் நடைபெற்றது. அன்னை மரியா முன்கூட்டியே சென்றுவிட்டார். திருமணத்தினத்தன்று இயேசு சென்றார். திராட்சை ரசம் தீர்ந்துபோய், இந்தக்குறையைப் போக்க தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதும் நாமறிந்ததே. இயேசுவின் முதல் புதுமை அன்று தானே நடந்தேறியது. ஓய்வுநாளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் இயேசுவின் பன்னிரண்டாம் நிலை.

13.மனித சுபாவத்தில் அச்சம், பீதி அடைந்த இயேசு இரத்த வேர்வை சிந்திய நிலை.

இறைவனின் திட்டத்தை அறிந்து அவைகளைத் தமதாக்கி அவைகள் நிறைவேறத் தம்மைத் தாமே தயாரித்த நிலை. தம்மைக் குறித்து எழுதப்பட்டவைகள் அனைத்தையும் ஒரு புள்ளி கூட மாறாமல் வாழ்ந்து காட்டியவர். சமூக மாற்றம், பாவமன்னிப்பு, சமய வழிப்பாட்டுக் குறைகள், எளியோரை இனம் காணுதல் என்ற பல துறைகளில் முத்திரை பதித்தவர். தன்னுடைய பணிக்காலம் முடிந்து தந்தையோடு ஒன்றிக்கப்படுவதற்கு முன்பாக, தாம் பட இருக்கக்கூடிய பாடுகளை நினைத்து, கெத்சனே தோட்டத்தில் மனம் உடைந்து இரத்த வேர்லை வியர்த்தது இயேசுவின பதின்மூன்றாம் நிலை.

14 கடவுள் கைவிட்டதைப்போல உணர்ந்த இயேசுவின் நிலை.

மூன்றாண்டு காலத்தில் எந்தச் சமயத் தலைவரும் செய்யாத அற்புதத்தை ஆண்டவர் இயேசு செய்து, உலகத்தைப் புரட்டிப்போட்டார். ஏனெனில் அவரின் வார்த்தையில் உயிர் இருந்தது. செயலில் அன்பு இருந்தது. இயேசு தாமாக முன்வந்து தன்னைக் கையளிக்கிறார். தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் மானிடப் பிறவியில் அவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. சாவிலும் இறைபுகழ் பாடினார். திருப்பாடல் 22 ஐ அவர் இறைபுகழாகச் சொல்கிறார். “ஆண்டவரே, ஆண்டவரே ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” சிலுவையிலும் மீட்புபணி. ‘எல்லாம் முடிந்தது’ எனக்கூறி தன் ஆவியை தந்தை இறைவனிடம் ஒப்படைக்கும் பதினான்காம் நிலை.

15 தூய ஆவியானவரை நமக்குத் துணையாளராக அனுப்பிய நிலை


‘நான் விண்ணகம் சென்று தந்தையிடமிருந்து தூய ஆவியானவரை அனுப்புவேன். உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். அவர் உங்களோடு என்றென்றும் இருப்பார்.’ என நமக்காக தந்தையிடம் பரிந்துபேசி ஆவியானவரை அனுப்புகிறார். தந்தையின் அன்பும், இயேசுவின் அருளும் ஆவியானவரின் நட்புறவும் நம்மை காத்து வழிநடத்துகின்றன.