ஐந்து பெரிய உடன்படிக்கைகள்


பேராசிரியர் அ.குழந்தைராஜ், அருட்பணி உதவியாளர்.

உடன்படிக்கை 'Covenant' என்பது வாக்குறுதி 'Promise' அல்ல; உடன்பாடு 'Agreement' அல்ல; ஒப்பந்தம் 'Contact' அல்ல. உடன்படிக்கை என்பத கடவுள் மனிதனோடு செய்யம் வாக்குத்தத்தம். எபிரேய ழொழியில் ‘வெட்டுதல்’ எனப்படுகிறது ToCut. இரு மனிதர்கள் தாங்கள் ஒத்துக்கொள்ளும் சமயத்தில் ஓர் உயிரைப் பலியாகக் கொடுத்து, அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. (எரே 34:18) சில சமயங்களில் உணவைப் பகிர்ந்து உறுதி எடுத்தனர். (தொ.நூ 31:54) லாபான் மற்றும் யாக்கோபு..

Noah and covenantநோவாவோடு உடன்படிக்கை செய்து ‘உலகத்தை நீரால் அழிக்கமாட்டேன்.’ என உறுதியைப் பெற்றார். நோவா கடவுளோடு நடந்தவர். நோவாவின் முப்பாட்டனார் ஏனொக்கு உடலோடும் ஆன்மவோடும் எடுத்துக் கொள்ளப்பட்டவர். நோவே 120 ஆண்டு காலங்கள் நற்செய்தி அறிவித்தார். அன்னாரின் வார்த்தையைக் கேட்ட 8பேர் காப்பாற்றப்பட்டனர். நோவா பேழைக்குள் நுழைந்ததும் கடவுள் வெளியிலிருந்து கதவைச் சாத்தினார். (தொ. நூ. 7:16)பிற்பாடு வானவில் வடிவத்தில் உடன்படிக்கை செய்தார்.

ஆபிரகாம் ‘விருத்தசேதனம்’ செய்த உடன்படிக்கையைச் செய்து கொண்டார். அவரின் மனைவி அவருக்கு விருத்தசேதனம் செய்தார். ‘சீனாய் மலையில் மிருகங்களின் இரத்தத்தைத் தெளித்து மோசே உடன்படிக்கை செய்தார். இருதனி மனிதர்கள் தாவீதும் யோனத்தானும் உடன்படிக்கை செய்தனர். எல்லாவல்ல, எல்லாமுமாகிய, எங்கும் பிரசன்னமாக உள்ள இறைவன் நீர்க்குமிழ் போன்ற நிலையில்லாத, பாவ நிலையில் உள்ள தீமைகள் நிறைந்த மனிதர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை ஆச்சர்யம் நிறைந்தது. ஒவ்வொரு உடன்படிக்கையையும் செல்லாததாக்கி செயலிழக்கச் செய்யப்பட்டது போல் உள்ளது.

Moshe with  covenantஆபிரகாம் கல்தேயப்பகுதி ‘ஊர்’ என்ற இடத்திலிருந்து வடக்குப்பக்கம் சென்று ‘ அன்றை நாளில் இருந்த வணிகப்பாதையைத் தேர்ந்தெடுத்து ஹாரான் எனும் பிரபலமான செழிப்பான வணிக மையத்தை அடைந்தார். 75 ஆவது வயதில் தான் முன்பின் தெரிந்திராத ‘வாக்களிக்கப்பட்ட’ கானான் நகரை அடைந்தார். ஆபிரகாம் தன் மனைவியுடன் மருமகன் ‘லோத்’தையும் அழைத்து சென்றார். ஹாரனிலிருந்து தெற்கு நோக்கி வணிகப்பாதையைத் தேர்ந்தெடுத்து சிக்கேம், பெத்தேல் வழியாகக் ‘கானான்’ சென்றார். விசுவாசத்துடன் கானான் நாடடை அடைந்த ஆபிரகாம் தன் இனம் மிகப்பெரிதாக ஆகும் என நினைக்கவில்லை. வாரிசு இல்லாத யூதன் ஒரு அடிமையைத் தத்தெடுத்து வாரிசைக் காப்பாறலாம் என எண்ணி தமஸ்கு ஊரைச் சார்ந்த எலியேசரை கடவுள் புறக்கணித்தார். விசுவாசம் ஒன்றே மூலதனமாகக் கொண்டு ஈசாக்கோடு மற்றொரு உடன்படிக்கையைச் செய்தார். (தொ.நூ. 17:19)

யோசேப்புக் காலத்தில் இஸ்ரயேலர்கள் எகிப்துக்குச் சென்றார்கள். கடவுள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு உடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். பின்னர் மோசேயோடு 10 கட்டளைத் தந்து உடன்படிக்கை ஏற்படுத்தினார். இவ்வாறு மனுக்குலத்தை மீட்க கடவுள் அடிக்கடி உடன்படிக்கையை புதுப்பித்துக் கொண்டேயிருந்தார்.

பின்னர் அரசர் தாவீது உடன் ஓர் உடன்படிக்கை.

new covenant

இப்படி பல பழைய ஏற்பாட்டு கால உடன்படிக்கைக்களுக்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்தார் ஆண்டவர் இயேசு. இது சீனாய் மலை உடன்படிக்கை அல்ல, சீயோன் மலை உடன்படிக்கை. இது இயேசுவின் உயிர்ப்பின் அடிப்படையில் நிகழ்வுற்றது. பழைய உடன்படிக்கைகள் மனிதர்கள், பொருட்கள் மீது செய்யப்பட்டவை. ஆனால் புதிய உடன்படிக்கை மனித உள்ளத்தில் எழுதப்பட்டது. இயேசுவின் இரத்ததினால் ஏற்பட்ட உடன்படிக்கை. மனிதர்களின் பாவங்களுக்காகச் சிந்தப்பட்டது. இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருந்தார். பழைய உடன்படிக்கை ஒழிந்து புதிய உடன்படிக்கை தோன்றியுள்ளது.

புதிய உடன்படிக்கை உலகமக்கள் அனைவருக்கும் பொதுவானது, உரியது. ஏரேமியாவின் கூற்று (எபி 8:13) உண்மையானது.